வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அவர்களின்தயவு உங்களுக்குபயன்படலாம்....

ஏறும் வரை
ஏறி விட்டு
ஏறி வந்த ஏணியை
எட்டி உதைத்தால்
பாதிப்பு
ஏணிக்கு அல்ல...

எட்டி 
உதைத்தவனுக்குத் தான்...

உச்சத்தில் இருப்பவன்
எப்போதும் உச்சத்திலே
இருப்பதும் இல்லை...

பஞ்சத்தில்
வாழ்பவன்
எல்லா நேரமும்
பட்டினியால்
மடிவதும் இல்லை...

வரலாற்றை ஆராய்ந்து
பாருங்கள்...

ஒரு வேளை
உணவிற்கு கஷ்டப்பட்டவர்கள்
எல்லாம்... இன்றைக்கு
உலகை ஆளும் வல்லுநர்களே!...

இறங்கு முகம்
ஒன்றிருந்தால்
ஏறுமுகம்
ஒன்றிருக்கும்...

அப்படி ஏறி வரும்
போது கடந்து வருபவர்களை
கஷ்டப்படுத்தாமல்
இருங்கள்...

ஒருவேளை
நீங்கள் இறங்கி வரும்
வேளையில் அவர்களின்
தயவு உங்களுக்கு
பயன்படலாம்....

சிந்தனை செய் மனமே!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக