செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

தனிமை

தனிமை…!!

ஒருவன் தனிமையை 
விரும்புகின்றான் என்றால்
அவன் 
இந்த உலகத்தை
வெறுத்து ஒதுக்குகின்றான் 
என்று அர்தமில்லை..!!!
அவனால் 
இந்த உலகத்தோடு
ஒன்றி வாழத் தெரியவில்லை
என்று பொருளில்லை..!!!

அவன் 
தனது வாழ்க்கையை
இரைமீட்க்க 
எடுத்துக் கொள்ளும்
இடைவேளை தான் 
அந்த தனிமை…!!

ஒரு நெடுந்தூர பயணத்தில்
ஜன்னல் கரை இருக்கையில்
மனதிற்கு நெருக்கமான 
ஒரு பாடல் தொகுப்புடன் 
நாம் கடக்கும் மலைகளும்
கடல்களும் பாலங்களும் 
வயல்களும்
பகல்களும் இரவுகளும் 
நட்சத்திரங்களும் பறவைகளும்
இவற்றுடன் 
தனிமையும் 
என் நினைவலைகளும்…!!!!

இடைக்கிடை 
மனதுகுள் சிரித்தும் 
இடைக்கிடை 
உடைந்து அழுதும்..!!
வாழ்க்கை கடந்து வந்த 
பாதைகளை 
நினைவுகளாய் 
கடத்திச் சென்று
உணர்சி பெருகும் 
ஓர் கணம்…!!

தனிமை 
மனிதனை 
பலப்படுத்தும் 
பலவீனப்படுத்தும்
திடப்படுத்தும் 
உடைந்து 
திணரடிக்கும்…!!!

தனிமை 
எமக்காக நாம் 
செலவு செய்யும் 
ஓர் கனாக்காலம்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக