செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

கனவுகளுக்கு என்ன

கனவுகளுக்கு 
என்ன 
தேய்ந்து விடப் 
போவதில்லை
காசுகள் தான் 
கலியாகிவிடுகின்றன.

சனி, 22 பிப்ரவரி, 2025

வாசித்தலை நேசித்தாலே

மனிதர்கள் உங்களை
கைவிடும் போதெல்லாம்
நீங்கள் "புத்தககங்களை"
அரவணைத்துக் கொள்ளுங்கள் ...

வாசித்தல் என்பது ஒரு கலை
ஒரு மன நிறைவு
ஒரு தனிமை விரட்டி...

வாசிக்கும் போது எதுவும்
மனதில் பதியாதது போல்
ஒரு குழப்ப மான
மன நிலையைத்தான் கொடுக்கும்...

ஒவ்வொரு சிறந்த புத்தகங்களும்
ஒவ்வொரு "வைட்டமின்"
மாத்திரைகள் மாதிரி
மூளையால் உறிஞ்ச பட்டு
மனதில் பதி(விதை)க்க படுகிறது...

அது நமக்கே தெரியாமல்
நம்மை பலப்படுத்துகிறது
உடனே தெரிவதில்லை எந்த
மாற்றமும்.....

ஒரு சிறந்த புத்தகம் என்பது
ஆயிரம் அனுபவங்களை
சுமந்திருக்கிறது... 

வாசித்தலை நேசித்தாலே
இங்கே பல வலிகளுக்கு
வழி தானாக பிறக்கும்....!!!
காற்றின் மொழி

இந்த தனிமையின்

உன் கரம் விடுபட்ட நாளிலிருந்து
தொடங்கியது நெருப்பின் மேல்
நின்றுழலும் இந்த 
நரகமொத்த வாழ்க்கை.. !! 

இந்த தனிமையின் 
சுதந்திரமென்பது 
ஒரு எரிமலையின் 
உச்சி மேல்
நின்று கொண்டு ... 
அலை கடலின் ஓசையையும்
நிலவின் அழகையும்
தென்றலின் குளிர்ச்சியையும்
ரசிப்பதை போல.... 

என் வாழ்வில் நீயற்ற 
இந்த வெறுமை 
என் இதயத்தில் 
எரிமலை போல் 
கனன்று கொண்டே இருக்கிறது... 

தனிமை என்பது வரமும் அல்ல 
இந்த சுதந்திரம் என்பது 
விடுதலையுமல்ல.... 

சாப மொத்த இந்த வாழ்கையை 
எனக்கு நீ 
பரிசளித்திருக்க வேண்டாம்...!! 

காற்றின் மொழி 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

தனிமை

தனிமை…!!

ஒருவன் தனிமையை 
விரும்புகின்றான் என்றால்
அவன் 
இந்த உலகத்தை
வெறுத்து ஒதுக்குகின்றான் 
என்று அர்தமில்லை..!!!
அவனால் 
இந்த உலகத்தோடு
ஒன்றி வாழத் தெரியவில்லை
என்று பொருளில்லை..!!!

அவன் 
தனது வாழ்க்கையை
இரைமீட்க்க 
எடுத்துக் கொள்ளும்
இடைவேளை தான் 
அந்த தனிமை…!!

ஒரு நெடுந்தூர பயணத்தில்
ஜன்னல் கரை இருக்கையில்
மனதிற்கு நெருக்கமான 
ஒரு பாடல் தொகுப்புடன் 
நாம் கடக்கும் மலைகளும்
கடல்களும் பாலங்களும் 
வயல்களும்
பகல்களும் இரவுகளும் 
நட்சத்திரங்களும் பறவைகளும்
இவற்றுடன் 
தனிமையும் 
என் நினைவலைகளும்…!!!!

இடைக்கிடை 
மனதுகுள் சிரித்தும் 
இடைக்கிடை 
உடைந்து அழுதும்..!!
வாழ்க்கை கடந்து வந்த 
பாதைகளை 
நினைவுகளாய் 
கடத்திச் சென்று
உணர்சி பெருகும் 
ஓர் கணம்…!!

தனிமை 
மனிதனை 
பலப்படுத்தும் 
பலவீனப்படுத்தும்
திடப்படுத்தும் 
உடைந்து 
திணரடிக்கும்…!!!

தனிமை 
எமக்காக நாம் 
செலவு செய்யும் 
ஓர் கனாக்காலம்..!!

வியாழன், 13 பிப்ரவரி, 2025

அது கெட்டு போகாது.

ஒவ்வொரு குடும்பத்துலயும் ஒரு நல்ல பிள்ளை ஒன்னு இருக்கும்.
அது இளிச்சவாயா இருக்கும்.
அது எல்லாத்துக்கும் எல்லாத்தையும் குடுத்துரும்.
கொடுக்கலைன்னாலும் கொடுக்க வச்சிருவாங்க.

அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்கட்டும்னு நினைக்கும்.
But அந்த ஒரு ஜீவன் மட்டும் அப்போதைக்கு நல்லாவே வாழாது. 
அதுகிட்ட இருந்து எடுத்துக்கிட்டவங்க யாரும் திருப்பி எதுவும் செய்ய மாட்டாங்க.
பொழைக்க தெரிலனு comment வேற செய்வாங்க.
அதெல்லாம் அது எதையும் கண்டுக்காது.
கண்டிப்பா கஷ்டம் தான் படும்.
ஆனாலும் திரும்ப திரும்ப நல்லது தான் செய்யும்.

அது வாங்கற அடி யாராலும் வாங்கியிருக்க முடியாது.
அவ்வளவு அடி மேலே அடி வாங்கிட்டு திரும்ப வந்து செஞ்சிட்டே இருக்கும் அந்த இளிச்ச வாய் ஜீவன் ‌‌.

பிகு.

இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்.
அது கெட்டு போகாது.
அமோகமாக வாழும் ...

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

இவ்வளவுதான் வாழ்க்கை..

4 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் 
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!

8 வயதில் உன் சாதனை என்பது
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ தெரிந்து கொள்வதாகும். 

12 வயதில் உன் சாதனை என்பது 
உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும். 

18 வயதில் உன் சாதனை என்பது 
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.

23 வயதில் உன் சாதனை என்பது
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம் 
பெறுவதாகும்.

25 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு ஒரு வேலை கிடைப்பதாகும். 

30 வயதில் உன் சாதனை என்பது
ஒரு குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும். 

35 வயதில் உன் சாதனை என்பது
நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டு என்பதாகும். 

45 வயதில் உன் சாதனை என்பது
உன் இளமையை நீ தக்க வைத்துக் கொள்வதாகும். 

50 வயதில் உன் சாதனை என்பது
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.

55 வயதில் உன் சாதனை என்பது 
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும். 

60 வயதில் உன் சாதனை என்பது
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும். 
 
65 வயதில் உன் சாதனை என்பது 
நோயின்றி வாழ்வதாகும். 

70 வயதில் உன் சாதனை என்பது 
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும். 

75 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு இன்னும் நண்பர்கள் இருப்பதாகும். 

80 வயதில் உன் சாதனை என்பது 
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும். 

85 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.

 *இவ்வளவுதான் வாழ்க்கை..

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

அவ்வளவு மட்டுமே

சிலர் உங்களை
எவ்வளவு
பயன்படுத்த முடியுமோ 
அவ்வளவு
மட்டுமே நேசிப்பார்கள்.

நன்மைகள் 
நிறுத்தப்படும் இடத்தில்
அவர்களின் 
விசுவாசம்
முடிவடைகிறது.

நீங்களும்,,உங்கள் சிக்கனமும்....

 நீங்களும்,,
உங்கள் சிக்கனமும்....

நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை 300 ரூபாய் கொடுத்து ஒரு நவீன திரை அரங்கில் பார்க்கையில் வராத சிக்கனம்...

இருபது முப்பது ரூபாய்க்கு சாப்பிடவேண்டிய உணவை முன்னூறு ரூபாய் கொடுத்து ஒரு குளிசாதன உணவகத்தில் சாப்பிடுகையில் வராத சிக்கனம்...

முன்னூறு ரூபாய் பெறுமானமுள்ள சட்டையை (உடுப்பை) 3000/ரூபாய் கொடுத்து பிரபல துணிக்கடையில் வாங்கையில் வராத சிக்கனம்...

பத்து ரூபாய் மட்டுமே மதிப்புள்ள காப்பியை நூறு ரூபாய் கொடுத்து நவநாகரீக காப்பி கடைகளில் குடிப்பதற்காக தரும்போது வராத சிக்கனம்...

தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்,
வீட்டுக்கே வந்து காய் விற்கும் தாத்தாவிடமும் 
பத்து ரூபாய் கொடுத்து வாங்குகையில் வந்து விடுகிறது;
ரெண்டு ருபாய் குறைத்து கொண்டு எட்டு ரூபாய் தருகிறோம்; 

கேட்டால்... சிக்கனமாம்..

பிரபஞ்சன்

வாழ்க்கை அவர்களுக்கானது...

யாரையும் இழிவுபடுத்த வேண்டாமே...!!! விட்டுவிடுங்கள்!

ஒரு தம்பதி 50வயதில் குழந்தை
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

ஒரு பெண் பலகாலம் சென்று
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

திருமணம் முடிந்து 5ஆண்டுகள்
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன் கணவனோடு
கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

அவரவர் அவர் விரும்பியவாறு
வாழ்ந்து கொள்ளட்டும்...
அவர்களுக்கு
வெளியில் சொல்லமுடியாத
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம்
புன்னகையுடன் உரையாடுங்கள்.
முடியாவிட்டால்,மௌனமாக
கடந்துவிடுங்கள்...
அது போதும்...

உங்களது வாழ்க்கை உங்களுக்கானது...
அவர்களது வாழ்க்கை
அவர்களுக்கானது...
புறம் பேசி அலைவதைவிட,இத்தகைய
மன நிலைஅமையப் பெற்றால்
நாம் உயர்நதவர்கள் தானே...!!!

நதியின் கண்ணீர்!

மணல் அள்ளிச் செல்லும் லாரியிலிருந்து கசிகிறது நதியின் கண்ணீர்!



-திருவைக்குமரன்

1

சனி, 8 பிப்ரவரி, 2025

வசதியான செருப்பு

"ஜாதி ஒரு வசதியான செருப்பு" தேய்ந்து விட்டது எனில் கழட்டி எறி தலையில் வைத்துக் கொண்டு அலையாதே...

-தோழர் அலங்கை திலீபன் செயமணி

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

வயதை தின்று

கொண்டாட்டங்களின் மீது 
இருந்த ஆர்வம் 
அறவே மறைந்து 
வெறும் விடுமுறைதான் 
என சிந்திக்கிறேன். 

காலம்தான் எவ்வளவு குரூரமானது? வயதை தின்று 
அனுபவங்களையும் 
முதிர்ச்சியையும் 
கக்குகிறது! 

குழந்தையாகவே 
இருந்து இருக்கலாம் 
என்ற எண்ணத்தை 
எப்போதும் நீங்காமல் காத்து வைத்திருக்கும் மனமும்
 ரணம்தான்.

நமக்கானது நம்மிடமே

பொறுமையாக 
காத்திருங்கள் 
உங்களுக்காக
படைக்கப்பட்ட இதயம் 
வேறு யாரிடமும் செல்லாது... 
செல்லவும் முடியாது... 
நமக்கானது நம்மிடமே வந்து சேரும் 

- கார்மேக குழலி


பொறுமையாக
இருங்கள்
உங்களுக்காக எழுத
பட்டவை உங்களை
வந்து சேர்ந்தே
தீரும் ' ஏனென்றால்
அதை எழுதியவன்
மிக சிறந்த
எழுத்தாளன்

இறைவன்

அனைவரும் நல்லவர்களே.

🕊️சமயத்திற்கு ஒரு பேச்சு. சந்தர்ப்பத்திற்கு 
ஒரு நடிப்பு 
என்று 
உள்ளவர்களின் சகவாசம் 
சங்கடத்தில் தான் 
போய் முடியும்.

🕊️முகம் எது
 முகமூடி எது என்றே 
தெரியாமல் 
பழகிக் கொண்டிருக்கிறோம் மனிதர்களிடம்.

🕊️முகமூடி கிழியும் வரை
 அனைவரும் 
நல்லவர்களே.
கார்மேக குழலி

நீ என் கிளைநான் உன் கூடு

நான் வானத்தோடு 
பிணைக்கப் பட்டிருக்கிறேன்
நீ பூமியோடு 
பிணைக்கப் பட்டிருக்கிறாய்
பறவைக்கு தாவரத்திற்க்குமான 
தூரம் தான் அது ஆனாலும் 
நீ என் கிளை
நான் உன் கூடு 

கார்மேக குழலி