யாருடனும் தொடராதீர்கள்...
முடிந்தால் நல்ல நினைவுகளை மட்டும் பரிசளித்து விட்டு கூடு திரும்புங்கள்..
கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பத்தை வெளியேற்ற கண்ணாடியை உடைக்க முயலாதீர்கள்..
சில நேரம் நழுவுதல் மிக நல்லது...
மெதுவாக அவ்விடம்விட்டு நகருங்கள்....
உங்கள் காயங்களை உப்பு காற்றில் உலரவிடுங்கள்...
உங்களால் காயப்பட்ட அவர்களின் சிறகுகளுக்கு மருந்திடுங்கள்...
தவறு அவர்கள்தெனினும் நீங்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுங்கள்....
உங்கள் பிடியை விடுங்கள்
அவர்கள் பிடித்த இடம் பறந்து போகட்டும்...
சிலருக்கு மாளிகையை விட மணல் வீடு நிம்மதியை தரலாம்...
மனதில் இருந்து அவர்களை விட்டு விடுங்கள்...
மனம் விட்டு பேசிவிடாதீர்கள்..
பறக்க தயாராகும் காதுகளுக்கு கேட்கும் நேரம் இருக்காது...
பின்னொரு நாளில் ஏதேனும் சந்திப்பு நிகழ்ந்தால் எந்த சலனமுமின்றி இயல்பாக கை கொடுக்கும் சூட்சுமத்தை ஏதோ ஒரு அரசியல்வாதியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்...
கொள்கைக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லையாம்...
அதனால் தான் நீங்கள் தனித்து விடப்பட்டு இருக்கிறீர்கள்....!
✍️நாஞ்சில் டென்னிசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக