மழையையும்
மழை கொல்லும் காலங்களில்
வெய்யிலையும்
எவரும் பேசும் பேசாத சொற்கள்
பதங்கமாக்கிக்கொள்வதையும்
காலம் படியளந்திருக்கிறது
நிறைநாழி அதன்
தலைமாட்டில் அமர்த்தும்
கடைசி தானியம் ஒன்று
கீழே சிதறாது இருக்கச்சொல்லும்
இந்த கவனத்தை உற்றுநோக்க
எது இங்கே மையப்யுள்ளி
கிளறிவிடும் காலங்களில்
பிரத்யேக நதியொன்றில்
மெல்ல பயணிக்கும்
என் படகை சாய்த்து விடாது
மண்டியிடத்தான் பிரார்த்தனை
ஒரேயொரு வாக்குதத்தம்
நிறைவேறாத நீர்த்துப்போகாது
உள்ளே கொதிக்கும் உலைநீர்போல
சுட்டுக்கொண்டேயிருக்கையில்
சிலபோது அச்சம் கூடுகிறது
ஆனாலும் ஒளியின் வழி
என் சாளரம் நுழைவதன்
ஆசி உணர்கையில்
மனம் மலரத் தோன்றுகிறது
வாழ்வின் மீது
எனக்கொன்றும் எந்நாளும்
தீராதப் பகையில்லை.....
உமா மஹேஸ்வரி பால்ராஜ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக