தகப்பனே கொலை செய்ய
முயற்சித்த போதும்
#பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தான் . . .
சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
#அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
#கைகேயி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .
உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
#விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
#பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
இளம் விதவையான சமயத்திலும்
#குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .
தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
#குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தார் . .
இவர்களால் எப்படி
மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது ?
அதுதான் #பிரம்மரகசியம் என்பது.....!
தன்னோடு #இறைவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!!
இறைவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர என்ன வழி?
#தன்னைஅறிந்தால்
தன் தலைவனை அறியலாம் . . .
தன்னை அறிய
தன்னை உணர்ந்த
உண்மை #குருவை
நாடுவதே சிறந்த வழி...
அதனால் இனி வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக
#கலங்காதே!
*எது எப்படி இருந்தாலும்,*
*எது எப்படி நடந்தாலும்,*
*யார் எப்படி* *நடத்தினாலும்,*
*யார் எப்படி* *மாறினாலும்,*
*எதை இழந்தாலும்,*
*யாரை இழந்தாலும்,*
*உன் இறைவன்* *உன்னுடன்*
*எப்போதும்* *இருக்கின்றான்*
*என்பதை முழுமையாக*
*நம்பு....*
#நீயும்மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,
#பிறரையும்மகிழ்ச்சியாக #இருக்கவிடு.
உன் எல்லா துன்பங்களில் இருந்தும்
அப்போதே விடுதலை கிடைக்கும்.....!
#மீள்பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக