திங்கள், 13 ஜனவரி, 2025

அவமானம்

ஓரிடத்தில் நீ அவமானப்படுத்தபட்டால் அவ்விடத்திலிருந்து நிறந்தரமாகவே விலகிவிடு... அன்பு, பாசம், என மீண்டும் சேர்ந்து நின்றால் அவமானங்கள் நிறந்தரமாகிவிடும்...

ஒரு போதும் எவரிடமும் உங்களைப் பற்றி
விளக்கம் கூறாதீர்.ஏனெனில்,
உங்களை நேசிக்கும் ஒருவருக்கு
அது தேவைப்படுவதில்லை
உங்களை வெறுக்கும் ஒருவர்
அதை நம்பப்போவதில்லை.

யாரும் உங்கள்
கண்ணீரை பார்ப்பதில்லை..
யாரும் உங்கள்
கவலைகளை பார்ப்பதில்லை..
யாரும் உங்கள்
வலிகளை பார்ப்பதில்லை..
ஆனால் எல்லோரும் உங்கள்
தவறை மட்டும் பார்ப்பார்கள்.

விலகி இருங்கள் உங்களை ஏமாற்றுபவர்களிடத்திலிருந்து மதிக்காதவர்களிடத்திலிருந்து உபயோகிப்பவர்களிடத்திலிருந்து விமர்சிப்பவர்களிடத்திலிருந்து தாழ்த்தி பேசுபவர்களிடத்திலிருந்து...

உறவுகள் நீர் போன்றது மனதில் ஈரம் உள்ளவரையில்...உறவாடும்
மனம் குளிர்ச்சியானால்...
உறையும் மனம் கொதித்தால்...
நீராவியாகிவிடும்.

சில நேரங்களில் சில மனிதர்களின் செயல்களை கண்டு ஆத்திரப்படுவதை விட! அமைதியாக சென்று விடுவது நல்லது!

உண்மையான உறவு என்பது, நமக்காக விட்டுக்கொடுக்கும்....
ஆனால், நம்மை அடுத்தவரிடம் எதற்க்காகவும் விட்டுக்கொடுக்காது..

புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்! வாழ்க்கை முழுவதும்!

மனைவியின் கோபத்தையும் கவலையையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தன் மனைவி கண் கலங்குவதை விரும்புவதில்லை!

இந்த உலகில் நமக்கென யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதைவிட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசியுங்கள் வாழ்க்கை மாறும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக