நண்பன் ஒருவன் எனக்காகச் சிந்திய
சில சொட்டுக்
கண்ணீருக்கு மட்டும்
வட்டி ஏறிக்கொண்டே போகிறது
-----
ஒவ்வொரு முறை
வீட்டு முகவரியை
சொல்லும்போதும்
நினைவில் வந்து
போகிறார் அம்மா
-----
ஒற்றைத் துளி
காதலில் தான்
எத்தனை எத்தனை
சமுத்திரம்
-----
மயானத் தொழிலாளனின்
பார்வையில்
நாம் எல்லாரும்
நடை பிணங்களே
--
முகப்பு உரையில்
"உள்ளே
உங்களையோ என்னையோ
காண நேரலாம்
ஏனெனில்
இங்கே நம்மைத் தவிர
வேறு யாரும் இல்லை"
- நந்தன் சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக