செவ்வாய், 25 டிசம்பர், 2018
ராயபுரம் மருத்துவமனை
மைசூரின் ஐதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த போரில் சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர். இதனால் 1782 இல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அறச்சீலர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்தார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது. 1799 இல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1808 இல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910 இல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.
ஞாயிறு, 18 நவம்பர், 2018
தமிழ் பண்பாடும் கலாச்சாரமும் பேச்சு
அச்சம் இல்லாத வீரமும், மண்டியிடாத மானமும், உயிரையும் கொடுக்கும் கொடையும், தமிழ் நிலத்தின் தனிப்பெரும் பண்புகளாம். திசைகளை எட்டாக வைத்தான் , ஸ்வரங்களை ஏழாக வைத்தான், நான் சுவைகளை ஆறாக வைத்தான் நாடி நிற்கும் பூதங்களை ஐந்தாக வைத்தான். நான்கு பொருள்களை உயிரின் பயனாக வைத்தான் இயல் ,இசை,நாடகமாய் மொழியினை மூன்றாக வைத்தான். அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையை இரண்டாக வைத்தான். இத்தனையும் வகுத்த தமிழன் ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான். அதை உயிரினும் மேலாக வைத்தான்.
ஒவ்வொருவரின் கடைமையை பற்றி உணர்த்தும் புறப்பாடல் நீங்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள்.
''ஈன்று புறந்தருதல் என் தலை கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
என்னும் பாடலின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் தமிழ் பண்பாட்டில் மிளிருபவை.
வடமொழி மனுநீதி 12 வயது வரை மட்டுமே தந்தை மகனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிறது.
ஆனால் தமிழ் நெறியோ ஒரு மகன் சான்றோன் ஆகும்வரை தந்தையின் கடமை முடிவதில்லை என்கிறது இதுவன்றோ தமிழ் பண்பாடு.
சாகா மருந்து கிடைத்தாலும் விருந்தினருக்கு கொடுக்காமல் தனியே உண்ணாதே என்கிறது தமிழ் வள்ளுவம் இதில் வென்று ஒளிருகிறது தமிழ் பண்பாடு.
போரில் தந்தையை இழந்தாள் தனையனையும் இழந்தாள் நேற்றைய போரினிலே கணவனையும் இழந்தாள் வம்சத்துக்கு ஒரேபிள்ளை , எள்ளும் தண்ணீரும் இரைப்பதற்கு ஒரேபிள்ளை , கொள்ளிக்கு ஒரேபிள்ளை என்று இருந்த தனது மகனை போர்க்களம் நோக்கி பகைவர்களை வென்று வா மகனே என்று அனுப்பிய வீரத்தாயின் விழுமிய பண்பு விளைந்தது தமிழ் பண்பாட்டில்.
முதுகில் புண்படாமல் மார்பில் புண்பட்டு இறந்த மகனை நோக்கி இதுவன்றோ ஆண்மகனாய் நான் உன்னை பெற்றதற்கு பெற்ற பயன் என்று கண்ணீர் சிந்தாமல் செம்மாந்து தன் தேசத்திற்காய் வீரமரணமடைந்த மகனை உச்சிமுகர்ந்து வீரவணக்கம் செலுத்துவாள் தமிழ் தாய்.

சனி, 17 நவம்பர், 2018
நிலக்கோட்டை ஜமீன்தார்கள்
இது
நிலக்கோட்டை ஜமீந்தார்கள் தமிழை ஆதரித்துள்ளனர். கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடுதூது காமச்சுவை பொருந்தியன. முதலில் மதுரைத் திருமலை நாயக்கர் மீது பாடி, அங்கே வரவேற்பில்லாமல் போகப் பிறகு நிலக்கோட்டைக் கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிச் சுப்பிரதீபக் கவிராயர் பாடியுள்ளார். திருமலையை நிந்தித்துத் தூதில், "தொந்தி வடுகன் என்னைச் சுகியானோ" என்று இரு கணிகையர் வாதில் சொல்லாடுவதாய்ச் சுப்ரதீபம் குறித்தார் என்ப. சுப்ரதீபத்தின் அச்சாகாத பழனி மதனவித்தாரம் என்னிடம் சுவடியாக உள்ளது.
வத்தலக்குண்டு தேசபக்தர்களைத் தந்துள்ளது: அவ்வூர்ச் சுப்பிரமணிய சிவா சுதந்திரம் வேண்டிப் பாடுபட்ட பாரதி, வ.உ.சி போன்றவர்களுடன் உழைத்த பெரியவர். வெஞ்சிறையில் வாடுகையில் தொழுநோய் தொற்றிற்று. பாரதமாதா ஆலயம் தருமபுரி பாப்பாரபட்டியில் அமைக்க முயற்சிகளைத் துவக்கியவர். தமிழில் ஏறுதழுவலைச் சொல்லும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ஆர். ராஜமையர் வத்லகுண்டுக்காரர்தான். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (The fatal rumour : a nineteenth-century Indian novel. B R Rajam Aiyar; Stuart H Blackburn, OUP, 1998). சி. சு. செல்லப்பா வாடிவாசல் என்ற நாவலிலும் அவ்வட்டார மரபை வடித்துள்ளார்.
===
2300 ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியில் தமிழ் தழைத்ததற்கு அரிய சான்றுகள் கிடைத்துள்ளன. ===
=== புலிமான் கோம்பை, தாதப்பட்டி என்னும் ஊர்களில்
கண்டறியப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள்: ===
புலிமான் கோம்பை வீரக்கற்கள்:
http://www.hindu.com/2006/04/05/stories/2006040518340600.htm
== சான்றுகள் ==
தாதபட்டி நெடுநிலைக்கல்
பழந்தமிழ்க் கல்வெட்டு.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிடைக்கும் சான்றுகளால் தமிழின் மிகப்பழைய வரலாறு மீளாய்வுக்கு உள்ளாகும்.
வத்தலக்குண்டு (வெற்றிலைக்குண்டு), நிலக்கோட்டை ஊர்களுக்கு அருகில் வைகைப் படுகையில் பல சங்ககாலக் கல்வெட்டுகள் நெடுங்கல் (menhir), நடுகல் (hero stone) இரண்டிலும் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கண்டெடுக்கப் பெற்றுள்ளன.
தாதப்பட்டிநெடுநிலைக் கல்

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை
அமைவிடம் : திண்டுக்கல் மாவட்டம்
கல்வெட்டுப் பாடம்:
அடியோன் பாகற்பாளிய் கல்
அடியோன் பாகற்பாளிய் கல்
சிறப்புகள் (தாதப்பட்டி நடுகல்):
சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள நடுகல் பற்றிய செய்திகள் (எழுத்துடை நடுகல், கூறுளி குயின்ற கோடுமா எழுத்து ) உண்மையே என மெய்பித்தது.
இதுவரை அவை ஓவியங்களைக் குறிக்கின்றன வரி வடிவங்களை அல்ல என்ற கருத்தும் நிலவியது.
இதுவரை அவை ஓவியங்களைக் குறிக்கின்றன வரி வடிவங்களை அல்ல என்ற கருத்தும் நிலவியது.
• இதுநாள் வரை கி.பி 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துப் பொறிக்கப்பட்ட இருளப்பட்டி நடுகல் கல்வெட்டே காலத்தால் முந்தியது என்ற கூற்று மாற்றப்பெற்றுள்ளது.
• நெடுநிலைக் கல்லில் எழுத்துக்கள் கிடைத்திருப்பினும் இதுவே முதல் முறையாகும்.
மேலும் சில செய்திகள்:
180 செ.மீ. உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்டது.. இதன் தொடக்கப்பகுதி உடைந்துள்ளதால் தொடக்க எழுத்துக்களை அறியஇயலவில்லை. '' ...ன் அடியோன் பாகற்பாளிய் கல் ''என்று பொறிக்கப்பெற்றுள்ளது. ஒரு தலைவனின் (தலைவனின் பெயர் உடைந்துள்ளது) அடியோன் ஆகிய பாகல் என்பவர்க்காக எடுக்கப்பெற்ற கல், என்பதே இதன் பொருள். ''அடி ஓன்'' என்பதை அடிமக்களைக் குறிக்கலாம் என ''அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்ற தொல்காப்பிய நூற்பாக்கொண்டு (தொல் :25) ஊகிக்கிறார் கா. ராஜன்.
http://182.19.37.67/ta/tdb-titles-cont-inscription-html-tatappatti-280430
http://182.19.37.67/ta/tdb-titles-cont-inscription-html-tatappatti-280430
=== அண்மைக்காலத்தில் அப்பகுதியிலே: ===
செவ்வாய், 13 நவம்பர், 2018
14 -11 -2018 குழந்தைகள் தின விழா கவிதை
தலைப்பு: தம்பிக்கு ஒரு சொல்
அம்மா அப்பா சொல்லை
அணுவளவும் தள்ளாதே பாப்பா
தாத்தா பாட்டி பேச்சை
தட்டாமல் கேக்கணும் தம்பி
கணிப்பொறி விளையாட்டை விட்டு
கால்பந்தை கைக்கொள்ளு பாப்பா
ஊர்க்கார நண்பர்களோடு
ஓடி விலையாடனும் தம்பி
ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றி அதை
உயிர் போல காக்கணும் பாப்பா
படிப்பையும் பண்பையும் நல்ல
பணிவையும் பின்பற்று தம்பி
பெரியோரின் சொல்கேட்டு நீயும்
பின்பற்றிச் சிறக்கணும் தம்பி
வள்ளுவர் அவ்வையார் சொற்கள்
வாழ்க்கைக்கு உறு துணை பாப்பா
அனாவை சொல்லிடும் போதே
அறம் சொன்ன தமிழ் அடி பாப்பா
தரணியில் முதல் மொழியான நம்
தாய்த்தமிழ் உயர் வடா தம்பி
தாய்மொழி கல்லாத மூடர்
சகவாசம் தள்ளடா தம்பி
குழந்தை நாள் கொண்டாடும் இன்றே நல்ல
குணம் இதை கைகொள் தம்பி.
தலைப்பு: தம்பிக்கு ஒரு சொல்
அம்மா அப்பா சொல்லை
அணுவளவும் தள்ளாதே பாப்பா
தாத்தா பாட்டி பேச்சை
தட்டாமல் கேக்கணும் தம்பி
கணிப்பொறி விளையாட்டை விட்டு
கால்பந்தை கைக்கொள்ளு பாப்பா
ஊர்க்கார நண்பர்களோடு
ஓடி விலையாடனும் தம்பி
ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றி அதை
உயிர் போல காக்கணும் பாப்பா
படிப்பையும் பண்பையும் நல்ல
பணிவையும் பின்பற்று தம்பி
பெரியோரின் சொல்கேட்டு நீயும்
பின்பற்றிச் சிறக்கணும் தம்பி
வள்ளுவர் அவ்வையார் சொற்கள்
வாழ்க்கைக்கு உறு துணை பாப்பா
அனாவை சொல்லிடும் போதே
அறம் சொன்ன தமிழ் அடி பாப்பா
தரணியில் முதல் மொழியான நம்
தாய்த்தமிழ் உயர் வடா தம்பி
தாய்மொழி கல்லாத மூடர்
சகவாசம் தள்ளடா தம்பி
குழந்தை நாள் கொண்டாடும் இன்றே நல்ல
குணம் இதை கைகொள் தம்பி.
திங்கள், 29 அக்டோபர், 2018
குழந்தைகள் தின கவிதை
அமைந்தது நாகமலை பக்கம்
உழைப்பாளர் வாழ்ந்திடும் ஊரு இதற்கு உயர்வினை தேடிட பாரு
நடுரோட்டில் விசில் போட்டு நீயும்
நாராசம் பண்ணாதே தம்பி
விருவீட்டு பள்ளியின் மானம் நீயும்
கெடும்படி செய்யாதே தம்பி
சினிமா செய்வதை எல்லாம் நீ
செய்தால்தான் பெருமையோ தம்பி
மயக்கிட உடுத்தும் சினிமா விட்டு நாலுபேர்
மதித்திட உடை போடு தம்பி
மருத்துவமனை வரை சாலை காலை மாலை
மரித்து நடப்பது ஒன்றே வேலை
வரும்போதும் போகும்போதும் நீயே வழிவிட்டு செல்லனும் தம்பி
வறுமை தெரியாமல் வளர்த்திடும் தந்தைக்கு
வாங்கித்தா நற்பெயரை தம்பி
உழைப்பு தெரியாமல் நீயும்
வளர்வதே பெருங்குற்றம் தம்பி
நிறைமாத கர்ப்பிணி போல நெளிந்து நகர்ந்து ஊரும் தெப்பத்துபட்டியின் பஸ்ஸில்
நீளமாய் வரிசையில் நின்றீர் ஒழுங்காய் ஏறியது என்றேனும் உண்டோ
படியிலே திகிலூட்டும் பயணம் அங்கே பார்க்கவே பயந்தார்கள் பெற்றோர் மருத்துவமனை வரை உள்ளேவளைவை தாண்டிட காட்டுவார் படிமீது வேலை
விமல் ஸ்டோரில் புது நோட்டு வாங்க வெகு பாடு படுகிறார் பெற்றோர் நீயோ ரஜினி ஸ் பேக்கரி லட்டை எண்ணி
நாவினில் நீர்விட்டே கெட்டாய்
முனீஸ்வரன் கோயில் வரை பஸ்ஸில் முடியலப்பா பஸ்ஸிலே கொட்டம்
58 கால்வாயை தாண்டி அகன்றாலும் அசிங்கமாய் சொல்பேசி அடடா அடடா அவமானம் மட்டம்
நட கோட்டை ஊர் வரை பஸ்ஸில் நடத்துனர் படும்பாடு நான் என்ன சொல்ல
ஊர்பார்க்க பொதுவிலே நீயும் உதிர்க்காதே வாயாலே என்றும்
அரை மணி நேரம் படிப்பு ஆசிரியரை கண்டால் நடிப்பு இதுதான் பள்ளி நடப்பு
நடிப்பாய் படிக்காதே படிப்பை நடிக்காதே ஏமாறுவது பெற்றோரோ ஆசிரியரோ இல்லை
ஏமாறுவது நீ ஆம் நீ ஆம் நீயேதான்
வியாழன், 10 மே, 2018
வியாழன், 3 மே, 2018
புதுமையான தமிழ்ப்பெயர்கள்
http://blog.ravidreams.net/புதுமையான-தமிழ்ப்-பெயர்/
வியாழன், 19 ஏப்ரல், 2018
சந்தையூர் ஜமின் வரலாறு
கோப்பைய நாயக்கனூர் (எ)
சந்தையூர் ஜமீன்
வரலாறு:(கி.பி1102-1900வரை)
சந்தையூர் ஜமின் ஏனைய
கம்பளத்தார் ஜமின்களை போல
மிகபழமை வாய்ந்தது . துவாபர
யுகத்தில் இக்கம்பள மக்கள்
கிருஷ்ணரை
வணங்கியதாகவும்
விஷ்ணு இவர்களுக்கு ஆசி
வழங்கி என்றும்
குறைவு இல்லாமல் இருப்பீர்
என்றும் , நீங்கள் சொல்லும்
வாக்கு பலிக்கும் என்றும்
கூறியதாக இக்குல மக்களால்
நம்பபடுகிறது .
சுமார் ஆயிரம் வருடம்
முன்பு தமிழ்நாட்டு எல்லை
பகுதியில் உள்ள ஆந்திர
மாநிலம் சந்திரகிரி மற்றும் சில
ஊர்களை குள்ளப்ப நாயக்கர்
என்பவர்
ஆட்சி செய்து வந்துள்ளார் .
இவ்வாறாக இருக்கையில்
விஜயநகர
மன்னரை ( சொந்தகாரரை )
பார்க்க சென்றுள்ளார்
குள்ளப்பர் , ஆனால் விஜயநகர
கோட்டைக்கு அவ்வளவு
எளிதாக யாரும் செல்ல
முடியாது . கோட்டை வாசலில்
சோமன் என்ற வீரன் ஒருவன்
இருப்பான் அவனிடம்
சண்டையிட்டு அவனை
வென்றால் தான்
கோட்டைக்குள் யாரும் செல்ல
முடியும் . யாராலும்
அடக்கமுடியாத அந்த
சோமனை குள்ளப்ப நாயக்கர்
மற்றும் அவரின் 8 சகோதரர்கள்
அடக்கி மன்னரை சந்தித்தனர் .
இவர்களின்
வீரத்தை கண்டு வியந்த மன்னர்
இவர்களுக்கு சாமரம் ,
அணிகலன் போன்ற
பரிசுகளை கொடுத்து
பாராட்டி அனுப்பினார் .
முகமதியர்களின்
படையெடுப்பில்
தெற்கு நோக்கி
கம்பளத்தார்கள் வருகையில்
குள்ளப்ப நாயக்கர் வம்சமும்
தமிழகத்தில் மதுரைக்குப்
பக்கத்தில் வந்து குடியேறினர் .
மதுரை பாண்டிய
மன்னர்களால் ஆளப்பட்ட நேரம்
என்பதால்
இவ்வம்சத்தை சேர்ந்தவர்கள்
பாண்டியரிடம் சென்று தாங்கள்
வாழும்
பகுதியை தாங்களே ஆள
வேண்டும் என்றும் தங்களின்
முன்னிலமையையும்
எடுத்து கூறினர். பாண்டியர்
கம்பளதார்களிடம் நீங்கள்
மதுரை பகுதியில் உள்ள
கள்ளர்களை அடக்கி காவல்
செய்வீர் என்றும் , திசைகாவல்
பொறுப்பை
கம்பளதார்களுக்கு
வழங்குகின்றேன்
என்று கூறினார் .
கம்பளத்தார்கள் அங்குள்ள
கள்ளர்களை அடக்கி "
கருக்கோட்டன் பட்டியில் ""
கோட்டை அமைத்து கி.பி.1102
- 1900
வரை இவர்களே இப்பகுதிக்கு
ஆட்சி செய்து வந்துள்ளனர் .
அரசர்களாகவும் , ஆங்கிலேய
ஆட்சி காலத்தில்
ஜமின்களாகவும்
இருந்து வந்துள்ளனர் .
பரவலாக
கிருஷ்ணசாமி குள்ளப்ப
நாயக்கரை பற்றிய ஆவணங்கள்
அதிக அளவில் உள்ளன
இந்த சந்திரகிரி அரசர் குள்ளப்பா நாயக்கரை நமது முன்னோர்கள்தான் உயிரை பனையம் வைத்து காப்பாற்றி உள்ளனர்.
இந்தக் கதைகளை முசுராம்படை என்று நமது கிராமத்தில் சொல்கிறார்கள்.
முஸ்லீம் படை என்பதே காலப்போக்கில் முசுராம்படை என்று மாறியுள்ளது.
குள்ளப்பாநாயக்கர் தங்கி இருந்த கோம்பை குள்ளக்கோம்பை என்று அன்றிலிருந்து அழைக்கப்படுகிறது.
இவர்கள் காங்கேயம் கருவூர் பகுதிகளில் சில காலம் தங்கியிருந்து மீண்டும் முஸ்லீம் படையின் தொல்லைகள் ஏற்பட்டதால் பகுள்ளக்கோம்பை வந்தனர் எனத் தெரிகிறது
ஆதாரம்:https://m.facebook.com/story.php?story_fbid=864717626925674&id=849411528456284
http://thottiyanaiker.blogspot.com/2012/01/blog-post_4686.html?m=1
சந்தையூர் ஜமீன்
வரலாறு:(கி.பி1102-1900வரை)
சந்தையூர் ஜமின் ஏனைய
கம்பளத்தார் ஜமின்களை போல
மிகபழமை வாய்ந்தது . துவாபர
யுகத்தில் இக்கம்பள மக்கள்
கிருஷ்ணரை
வணங்கியதாகவும்
விஷ்ணு இவர்களுக்கு ஆசி
வழங்கி என்றும்
குறைவு இல்லாமல் இருப்பீர்
என்றும் , நீங்கள் சொல்லும்
வாக்கு பலிக்கும் என்றும்
கூறியதாக இக்குல மக்களால்
நம்பபடுகிறது .
சுமார் ஆயிரம் வருடம்
முன்பு தமிழ்நாட்டு எல்லை
பகுதியில் உள்ள ஆந்திர
மாநிலம் சந்திரகிரி மற்றும் சில
ஊர்களை குள்ளப்ப நாயக்கர்
என்பவர்
ஆட்சி செய்து வந்துள்ளார் .
இவ்வாறாக இருக்கையில்
விஜயநகர
மன்னரை ( சொந்தகாரரை )
பார்க்க சென்றுள்ளார்
குள்ளப்பர் , ஆனால் விஜயநகர
கோட்டைக்கு அவ்வளவு
எளிதாக யாரும் செல்ல
முடியாது . கோட்டை வாசலில்
சோமன் என்ற வீரன் ஒருவன்
இருப்பான் அவனிடம்
சண்டையிட்டு அவனை
வென்றால் தான்
கோட்டைக்குள் யாரும் செல்ல
முடியும் . யாராலும்
அடக்கமுடியாத அந்த
சோமனை குள்ளப்ப நாயக்கர்
மற்றும் அவரின் 8 சகோதரர்கள்
அடக்கி மன்னரை சந்தித்தனர் .
இவர்களின்
வீரத்தை கண்டு வியந்த மன்னர்
இவர்களுக்கு சாமரம் ,
அணிகலன் போன்ற
பரிசுகளை கொடுத்து
பாராட்டி அனுப்பினார் .
முகமதியர்களின்
படையெடுப்பில்
தெற்கு நோக்கி
கம்பளத்தார்கள் வருகையில்
குள்ளப்ப நாயக்கர் வம்சமும்
தமிழகத்தில் மதுரைக்குப்
பக்கத்தில் வந்து குடியேறினர் .
மதுரை பாண்டிய
மன்னர்களால் ஆளப்பட்ட நேரம்
என்பதால்
இவ்வம்சத்தை சேர்ந்தவர்கள்
பாண்டியரிடம் சென்று தாங்கள்
வாழும்
பகுதியை தாங்களே ஆள
வேண்டும் என்றும் தங்களின்
முன்னிலமையையும்
எடுத்து கூறினர். பாண்டியர்
கம்பளதார்களிடம் நீங்கள்
மதுரை பகுதியில் உள்ள
கள்ளர்களை அடக்கி காவல்
செய்வீர் என்றும் , திசைகாவல்
பொறுப்பை
கம்பளதார்களுக்கு
வழங்குகின்றேன்
என்று கூறினார் .
கம்பளத்தார்கள் அங்குள்ள
கள்ளர்களை அடக்கி "
கருக்கோட்டன் பட்டியில் ""
கோட்டை அமைத்து கி.பி.1102
- 1900
வரை இவர்களே இப்பகுதிக்கு
ஆட்சி செய்து வந்துள்ளனர் .
அரசர்களாகவும் , ஆங்கிலேய
ஆட்சி காலத்தில்
ஜமின்களாகவும்
இருந்து வந்துள்ளனர் .
பரவலாக
கிருஷ்ணசாமி குள்ளப்ப
நாயக்கரை பற்றிய ஆவணங்கள்
அதிக அளவில் உள்ளன
கடைசி அரசர்
திரு.தும்மச்சிபாண்டியன்
(எ)
தும்மச்சி கோப்பைய நாயக்கர்
கடைசி இராஜமாதா
திருமதி.பொம்முத்தாயம்மாள்.
இந்த சந்திரகிரி அரசர் குள்ளப்பா நாயக்கரை நமது முன்னோர்கள்தான் உயிரை பனையம் வைத்து காப்பாற்றி உள்ளனர்.
இந்தக் கதைகளை முசுராம்படை என்று நமது கிராமத்தில் சொல்கிறார்கள்.
முஸ்லீம் படை என்பதே காலப்போக்கில் முசுராம்படை என்று மாறியுள்ளது.
குள்ளப்பாநாயக்கர் தங்கி இருந்த கோம்பை குள்ளக்கோம்பை என்று அன்றிலிருந்து அழைக்கப்படுகிறது.
![]() |
| குள்ளக்கோம்பை ஒரு தோற்றம் |
இவர்கள் காங்கேயம் கருவூர் பகுதிகளில் சில காலம் தங்கியிருந்து மீண்டும் முஸ்லீம் படையின் தொல்லைகள் ஏற்பட்டதால் பகுள்ளக்கோம்பை வந்தனர் எனத் தெரிகிறது
![]() கடைசி அரசியார் ஜமீன்தாரினி திருமதி.பொன்னழகுத் தாயம்மாள் |
வளர்ப்பு மகனான வைரவேல் பாண்டியனுடன்
நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில் பெரியோர்களால் பட்டம் சூட்டப்பட்ட ஜமீன்தார்
திரு.சீனிப்பாண்டியன்-ராமுத்தாயம்மாள்
ஆதாரம்:https://m.facebook.com/story.php?story_fbid=864717626925674&id=849411528456284
http://thottiyanaiker.blogspot.com/2012/01/blog-post_4686.html?m=1
புதன், 28 பிப்ரவரி, 2018
எர்ரக்கம்மா அநுபூதி
௳
பல்லவி
மறைநாயகியே எர்ரம்மா! எர்ரம்மா!
மணியார் குலங்காத் தருள்வாய்! வருவாய்!
முழுவான் நிலவே சிவனார் துணையே
வழுவே புரிவேன் பிழையேன் கலியால்
அழுதேன் அழுவேன் அடியார் துணையே
வழுவா தருள்வாய் வாகா எரமா!
(மறைநாயகியே)
பல்லவி
மறைநாயகியே எர்ரம்மா! எர்ரம்மா!
மணியார் குலங்காத் தருள்வாய்! வருவாய்!
முழுவான் நிலவே சிவனார் துணையே
வழுவே புரிவேன் பிழையேன் கலியால்
அழுதேன் அழுவேன் அடியார் துணையே
வழுவா தருள்வாய் வாகா எரமா!
(மறைநாயகியே)
திங்கள், 26 பிப்ரவரி, 2018
நெடுமிடல் அஞ்சி
அதியமான் நெடுமிடல்
அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர். பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னனின் சேனைத்தலைவனாக இருந்தவன். பசும்பூண் பாண்டியன், சேரன் செங்குட்டுவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலின் காலத்திலிருந்த பாண்டியன். மேலும், பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி. (அகம் 231).இவன் அதிகன் என்றும் இலக்கியங்களில் குறிப் பிடப்படுகின்றான்.
இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகைஎன்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் தோற்றது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன்என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆட்சிப் பகுதிதொகு
அதியமான் நெடுமிடல் அஞ்சி என்னும் இயற்பெயர் கொண்டவன் இந்த குறுநில மன்னன். மதுரைக்கு மேற்கே உள்ள வத்தலகுண்டு பெரியகுளம் பகுதி அக்காலத்தில் நெடுங்களநாடுஎன்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை பிழையா விளையுள் நாடு என்று பதிற்றுப்பத்து புகழ்கிறது. அதன் மன்னனே நெடுமிடல் ஆவான். நெடுங்களநாடு அதியமான்களின் பூர்வீகமாக இருக்கலாம். பசும்பூண் பாண்டியன், கொங்கு நாட்டில் சில இடங்களை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் கீழடங்கினார்கள். அவ்வாறு கைப்பற்றி தகடூரில் நிலையான ஆட்சியை நிறுவினான். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுவதால் அதியரின் முன்னோர் பாண்டிய நாட்டின் பகுதியாகிய நெடுங்களநாட்டினர் என்பது உறுதியாகிறது. கொங்கு நாட்டுச் சிற்றரசர்களில் முதன்மையானவராக தகடூர் அரசரான அஞ்சியரசர்கள் நிலைகொண்டனர்.
பாடிய புலவர்தொகு
- புலவர் காப்பியாற்றுக் காப்பியனார்பதிற்றுப்பத்து நாலாம் பத்து
சமகாலத்தவர்தொகு
- தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகிய பசும்பூண் பாண்டியன்
- நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி
- மிஞிலி யின்சமகாலத்தவரான
தலையாலங்கானத்து போரில் ஈடுபட்டவர்கள்.
செய்த போர்கள்தொகு
அரிமணவாயில் உறத்தூர் போர்தொகு
பாண்டிய நாட்டின் உட்பிரிவுகளாகிய நாடுகளில் பாரியின் பரம்பு நாட்டுக்கு வடக்கே கோனாடு என்று ஒரு நாடு இருந்தது. அங்கே பெருந்திரலார் என்பவர் வாழ்ந்து வந்தார். மக்கள் தலைவராக இருந்த அவருக்கும் கோனாட்டு மன்னனாக இருந்த எவ்வி என்பவருக்கும் கருத்து வேறுபாடு மிகுந்து இருந்தது. நீடூர் என்னும் எவ்வியின் ஊரக இருந்தது. ஆவுடையார் கோவில் பகுதியில் இருந்த மிழலை நாடுஎவ்வியினுடையது. (இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.)
எவ்வியின் வேண்டுகோளுக்காக அவரின் நண்பனாக இருந்த நெடுமிடல் சமாதானத்தால் வேறுபாட்டைக் களையமுயன்றார். பெருந்திரலார் தகாது பேசி சினமூட்டியதால் போர் மூண்டது. அரிமணவாயில் உறத்தூர் போர் தற்போது அரிமளம் என்னும் இடத்தில் நடந்தபோரில் எவ்வியின் சார்பாக போரிட்டு வென்றார். பரணர் பாடல் அகநானூறு 266) இல் இந்த செய்தி உள்ளது. பெருந்திரலார்க்குரிய அரிமணம் உறத்தூர் என்பன தற்போது புதுக்கோட்டை வட்டத்தில் இருக்கின்றன.
தலையாலங்கானத்து போர்
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் உடன் போருக்குக் காரணம்தொகு
பசும்பூண் பாண்டியன், கொங்கு தேசத்தின் சில பகுதிகளை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் பணிந்தனர். பாண்டியனுக்கு நெடுமிடல் அஞ்சி சேனைத் தலைவனாக அமைந்தான். பசும்பூண் பாண்டியன் கொங்கு பகுதிகளை வென்று கைப்பற்றியதை, அகநானூறு (செய்யுள் 253: 4-5)பேசுகிறது.
அவ்வேளையில் சேர நாட்டு அரசர்கள் கொங்கு நாட்டில் சில இடங்களைக் கைப்பற்றியிருந்ததோடு நிற்காமல் மேலும் ஊர்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சங்க காலத்திலே பல சிற்றசர்கள் கொங்கு பகுதியை ஆண்டனர். ஆகவே, சேர, சோழ, பாண்டிய அரசர் அச்சிற்றரசர்களை எளிதில் வெற்றிகண்டு கொங்கு நாட்டைச் கொஞ்சம் கொஞ்சமாக கைவசப் படுத்திக் கொண்டு இருந்தனர்.
கொங்குநாட்டை சேர அரசர் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது, பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டில் புகுந்து அந்நாட்டு ஊர்கள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டது காரணமாகச் சேரர், பாண்டியன் மேல் பகை கொண்டனர். ஆகவே, அது காரணமாகச் சேர அரசர், பசும்பூண் பாண்டியனோடு போர் செய்ய நேரிட்டது. பாண்டியன் சேனையை அவன் சேனைத் தலைவனான நெடுமிடல் அஞ்சி தலைமை தாங்கி நடத்தினான்.
பிழையாவிளையுள் நாட்டுப் போர்தொகு
பாண்டிய நாட்டின் மேற்கெல்லையாக பண்டியநாடும் சேரநாடும் சந்திக்கும் எல்லைப்பகுதியில் அளநாடு என்னும் வளம் மிக்க பகுதி இருந்தது. இன்றைய தேனி கம்பம் சின்னமனூர் பகுதியே எவ்வாறு அழைக்கப்பட்டது. அளநாட்டின் வழியாகச் சென்று எல்லை காவல் படையத்தாக்கினான் நெடுமிடல் அஞ்சி. சேரர்படை தோற்று ஓடியது. செய்தியறிந்த சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் பெரும் யானைப்படையுடன் வந்தான். நெடுமிடல் அஞ்சியின் பிழையா விளையுள்நாட்டை யானைப்படையின் கால்களால் மித்திகச் செய்து அழித்தான். பெருவழி என்று அழைக்கப்படும் வழியாக வைகை கரைவழியே படை நடத்திச் சென்று சேரன் அழிவை ஏற்படுத்தினான். வத்தலகுண்டு பெரியகுளம்பகுதி பெறும் அழிவை சந்தித்தது. அவ்வாறு நடந்த சில போரில் நெடுமிடல் அஞ்சி தோல்வியும் அடைந்தான். இச் செய்தியைச் பதிற்றுப்பத்து நாலாம் பதின் வாயிலாக அறிகிறோம்.
பாண்டியனின் துளு நாட்டுப் போர்
தொகு
துளு நாட்டு நன்ன அரசர் வடகொங்கு நாட்டில் ஆதிக்கம் செய்ய முயன்றார்கள். அதனால், வடகொங்கு நாட்டைக் கைப்பற்ற முயன்ற பசும்பூண் பாண்டியனுக்குத் துளு நாட்டரசர் எதிரிகளாயினர். பசும்பூண் பாண்டியன் துளுநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் சேனையை, அதிகமான் நெடுமிடல் அஞ்சி நடத்திச்சென்று துளு நாட்டில் புகுந்தான். அவனை நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் ஊருக்குப் பக்கத்தில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் அஞ்சி கொல்லப்பட்டு இறந்தான். மிஞிலி நன்னுக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் பெரும்படையுடன் வந்து தாக்கிய அதிகனைப் பாழி நகரில் இருந்த பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தான்.
அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளு நாட்டில் பாழிப் போரில் மரணமடைந்த செய்தியைக் கேட்டு அவன்மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந்தொகைச் செய்யுள் கூறுகிறது

இவற்றையும் பார்க்கவும்தொகு
அடிக்குறிப்புதொகு
1. • நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, (பதிற்றுப்பத்து 32-10)
நீடூர் கிழவோன்வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, (பரணர் பாடல் அகநானூறு 266)
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் என்று அகநானூறு (செய்யுள் 253: 4-5)கூறுகிறது ... ...
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பொருமலை யானையோடு புலங்கடை இறுத்து
(பதிற்றுப்பத்து நாலாம் பத்து2:10-11)
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் (அகம் 266: 12.)
கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு (அகம் 142:9-14) என்று அகப்பாட்டுக் கூறுகிறது.
- மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3
- பரணர் – குறுந்தொகை 393
- முனைவர் வ. குருநாதன் (2001, திருவள்ளுவர் ஆண்டு 2032). சங்ககால அரச வரலாறு. தஞ்சாவூர் - 613005: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். பக். 162 - 177.
- மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். (186 - 188)/232.
- அகம் 162, 231, 253, 338 குறுந்தொகை 393
- புறநானூறு 206
- சேரமன்னர் வரலாறு -ஔவை துரைசாமி

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)