செவ்வாய், 13 நவம்பர், 2018

14 -11 -2018 குழந்தைகள் தின விழா கவிதை
தலைப்பு: தம்பிக்கு ஒரு சொல்

அம்மா அப்பா சொல்லை
   அணுவளவும் தள்ளாதே பாப்பா
தாத்தா பாட்டி பேச்சை
   தட்டாமல் கேக்கணும் தம்பி

கணிப்பொறி விளையாட்டை விட்டு
  கால்பந்தை கைக்கொள்ளு பாப்பா
ஊர்க்கார நண்பர்களோடு
   ஓடி விலையாடனும் தம்பி

ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றி அதை
  உயிர் போல காக்கணும் பாப்பா
படிப்பையும் பண்பையும் நல்ல
  பணிவையும் பின்பற்று தம்பி

பெரியோரின் சொல்கேட்டு நீயும்
   பின்பற்றிச் சிறக்கணும் தம்பி
வள்ளுவர் அவ்வையார் சொற்கள்
   வாழ்க்கைக்கு உறு துணை பாப்பா

அனாவை சொல்லிடும் போதே
   அறம் சொன்ன தமிழ் அடி பாப்பா
தரணியில் முதல் மொழியான நம்
   தாய்த்தமிழ் உயர் வடா தம்பி

தாய்மொழி கல்லாத மூடர்
   சகவாசம் தள்ளடா தம்பி
குழந்தை நாள் கொண்டாடும் இன்றே நல்ல
  குணம் இதை கைகொள் தம்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக