திங்கள், 29 அக்டோபர், 2018

குழந்தைகள் தின கவிதை

அரசினர் மேல்நிலைப்பள்ளி விருவீட்டில்
அமைந்தது நாகமலை பக்கம்
உழைப்பாளர் வாழ்ந்திடும் ஊரு இதற்கு உயர்வினை தேடிட பாரு

நடுரோட்டில் விசில் போட்டு நீயும்
நாராசம் பண்ணாதே தம்பி
விருவீட்டு பள்ளியின் மானம் நீயும்
கெடும்படி செய்யாதே தம்பி

சினிமா செய்வதை எல்லாம் நீ
செய்தால்தான் பெருமையோ தம்பி
மயக்கிட உடுத்தும் சினிமா விட்டு நாலுபேர்
மதித்திட உடை போடு தம்பி

மருத்துவமனை வரை சாலை காலை மாலை
மரித்து நடப்பது ஒன்றே வேலை
வரும்போதும் போகும்போதும் நீயே வழிவிட்டு செல்லனும் தம்பி

வறுமை தெரியாமல் வளர்த்திடும் தந்தைக்கு
வாங்கித்தா நற்பெயரை தம்பி
உழைப்பு தெரியாமல் நீயும்
வளர்வதே பெருங்குற்றம் தம்பி

நிறைமாத கர்ப்பிணி போல நெளிந்து நகர்ந்து ஊரும்  தெப்பத்துபட்டியின் பஸ்ஸில்
நீளமாய் வரிசையில் நின்றீர் ஒழுங்காய் ஏறியது என்றேனும்  உண்டோ

படியிலே திகிலூட்டும் பயணம் அங்கே பார்க்கவே பயந்தார்கள் பெற்றோர் மருத்துவமனை வரை உள்ளேவளைவை தாண்டிட காட்டுவார் படிமீது வேலை

விமல் ஸ்டோரில் புது நோட்டு வாங்க வெகு பாடு படுகிறார் பெற்றோர் நீயோ ரஜினி ஸ் பேக்கரி லட்டை எண்ணி
நாவினில் நீர்விட்டே கெட்டாய்

 முனீஸ்வரன் கோயில் வரை பஸ்ஸில் முடியலப்பா பஸ்ஸிலே கொட்டம்
58 கால்வாயை தாண்டி அகன்றாலும் அசிங்கமாய் சொல்பேசி அடடா அடடா அவமானம் மட்டம்

நட கோட்டை ஊர் வரை பஸ்ஸில் நடத்துனர் படும்பாடு நான் என்ன சொல்ல
 ஊர்பார்க்க  பொதுவிலே நீயும் உதிர்க்காதே வாயாலே என்றும்

அரை மணி நேரம் படிப்பு ஆசிரியரை கண்டால் நடிப்பு இதுதான் பள்ளி நடப்பு
நடிப்பாய் படிக்காதே படிப்பை நடிக்காதே  ஏமாறுவது பெற்றோரோ ஆசிரியரோ இல்லை
 ஏமாறுவது நீ ஆம் நீ ஆம் நீயேதான்





1 கருத்து: