எப்படி வேண்டுமானாலும் அதை அழைத்துக்கொள்ளுங்கள்.
எந்த உறவு பெயராலையும் அதற்கு மேற்கோள் காட்டிக்கொள்ளுங்கள்.
அதெல்லாம் இங்கு தேவையேயில்லை.
யார் கையை பிடித்துக் கொண்டால்
நிம்மதியாக இருக்குமோ?
யார் அருகிலிருந்தால் சுவர்க்கத்தில் இருந்தாற் போல இருக்கிறதோ?
யார் தோளில் தலை சாய்த்தால் துயர் தீருமோ?
யார் குரலில் அக்கறை தென்படுகிறதோ?
யார் அதட்டலில் உரிமை வருகிறதோ?
யார் இல்லாமல் இருக்க முடியாதோ?
யார் இருந்தால் வாழ்வு தொடருமோ?
யார் பேசினால்
யாரை பார்த்தால்
யாருடன் இருந்தால்
யாருடன் இணைந்தால்
யாருடன் வாழ்ந்தால்
ஒரு திருப்தி இருக்கிறதோ?
ஒரு மனநிம்மதி கிடைக்கிறதோ?
ஒரு வாழ்வு மலரகிறதோ?
அந்த 'ஒருவர் தான்' காதல்.
அதற்கு என்று
எந்த பெயரும்
எந்த உருவமும்
எந்த குரலும்
எந்த பிரத்யேகமான வடிவமைப்பும் இல்லை.
இணைவதற்கு தான் இல்லாத போராட்டம் தேவை.
வாழ்வதற்கு எந்த மெனக்கெடலும் தேவையில்லை.
நான் உன்னை நேசிக்கிறேன் அவ்வளவே...
நான் உன்னுடன் இங்கு 'வாழ்கிறேன்' அவ்வளவே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக