சிதற விட்டது போல்
வாழ்ந்து இருக்கிறேன்
இன்னும் உன்னை
மிகச்சரியாகக்
கொண்டாடியிருக்க
வேண்டும்
எத்துனை ஆதுரம்
உன் சொல்
எத்துனை மதுரம்
உன் பிரியம்
உன் மொழிகளால்
இந்தப்பிரபஞ்சம் அறிய
உன் அன்பை உத்தேசிக்கும்
பொருட்டு
என் வாழ்வு துலங்குகிறது
உயிர்க்கும் இன்றைய
பூக்களின் ஒவ்வொரு
இதழ்களிலும் உன்முகம்
காண்கிறேன்
வாழ்வின் பூரணத்துவம்
அல்லது துலங்குதல்
எளிய அன்பின் கைம்மாற்றல்
உயிர் இருக்கும் வரை
மறக்கக்கூடாத பிரியம் உனது..
உமா மஹேஸ்வரி பால்ராஜ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக