அச்சம் இல்லாத வீரமும், மண்டியிடாத மானமும், உயிரையும் கொடுக்கும் கொடையும், தமிழ் நிலத்தின் தனிப்பெரும் பண்புகளாம். திசைகளை எட்டாக வைத்தான் , ஸ்வரங்களை ஏழாக வைத்தான், நான் சுவைகளை ஆறாக வைத்தான் நாடி நிற்கும் பூதங்களை ஐந்தாக வைத்தான். நான்கு பொருள்களை உயிரின் பயனாக வைத்தான் இயல் ,இசை,நாடகமாய் மொழியினை மூன்றாக வைத்தான். அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையை இரண்டாக வைத்தான். இத்தனையும் வகுத்த தமிழன் ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான். அதை உயிரினும் மேலாக வைத்தான்.
ஒவ்வொருவரின் கடைமையை பற்றி உணர்த்தும் புறப்பாடல் நீங்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள்.
''ஈன்று புறந்தருதல் என் தலை கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
என்னும் பாடலின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் தமிழ் பண்பாட்டில் மிளிருபவை.
வடமொழி மனுநீதி 12 வயது வரை மட்டுமே தந்தை மகனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிறது.
ஆனால் தமிழ் நெறியோ ஒரு மகன் சான்றோன் ஆகும்வரை தந்தையின் கடமை முடிவதில்லை என்கிறது இதுவன்றோ தமிழ் பண்பாடு.
சாகா மருந்து கிடைத்தாலும் விருந்தினருக்கு கொடுக்காமல் தனியே உண்ணாதே என்கிறது தமிழ் வள்ளுவம் இதில் வென்று ஒளிருகிறது தமிழ் பண்பாடு.
போரில் தந்தையை இழந்தாள் தனையனையும் இழந்தாள் நேற்றைய போரினிலே கணவனையும் இழந்தாள் வம்சத்துக்கு ஒரேபிள்ளை , எள்ளும் தண்ணீரும் இரைப்பதற்கு ஒரேபிள்ளை , கொள்ளிக்கு ஒரேபிள்ளை என்று இருந்த தனது மகனை போர்க்களம் நோக்கி பகைவர்களை வென்று வா மகனே என்று அனுப்பிய வீரத்தாயின் விழுமிய பண்பு விளைந்தது தமிழ் பண்பாட்டில்.
முதுகில் புண்படாமல் மார்பில் புண்பட்டு இறந்த மகனை நோக்கி இதுவன்றோ ஆண்மகனாய் நான் உன்னை பெற்றதற்கு பெற்ற பயன் என்று கண்ணீர் சிந்தாமல் செம்மாந்து தன் தேசத்திற்காய் வீரமரணமடைந்த மகனை உச்சிமுகர்ந்து வீரவணக்கம் செலுத்துவாள் தமிழ் தாய்.
ஞாயிறு, 18 நவம்பர், 2018
சனி, 17 நவம்பர், 2018
நிலக்கோட்டை ஜமீன்தார்கள்
இது
நிலக்கோட்டை ஜமீந்தார்கள் தமிழை ஆதரித்துள்ளனர். கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடுதூது காமச்சுவை பொருந்தியன. முதலில் மதுரைத் திருமலை நாயக்கர் மீது பாடி, அங்கே வரவேற்பில்லாமல் போகப் பிறகு நிலக்கோட்டைக் கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிச் சுப்பிரதீபக் கவிராயர் பாடியுள்ளார். திருமலையை நிந்தித்துத் தூதில், "தொந்தி வடுகன் என்னைச் சுகியானோ" என்று இரு கணிகையர் வாதில் சொல்லாடுவதாய்ச் சுப்ரதீபம் குறித்தார் என்ப. சுப்ரதீபத்தின் அச்சாகாத பழனி மதனவித்தாரம் என்னிடம் சுவடியாக உள்ளது.
வத்தலக்குண்டு தேசபக்தர்களைத் தந்துள்ளது: அவ்வூர்ச் சுப்பிரமணிய சிவா சுதந்திரம் வேண்டிப் பாடுபட்ட பாரதி, வ.உ.சி போன்றவர்களுடன் உழைத்த பெரியவர். வெஞ்சிறையில் வாடுகையில் தொழுநோய் தொற்றிற்று. பாரதமாதா ஆலயம் தருமபுரி பாப்பாரபட்டியில் அமைக்க முயற்சிகளைத் துவக்கியவர். தமிழில் ஏறுதழுவலைச் சொல்லும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ஆர். ராஜமையர் வத்லகுண்டுக்காரர்தான். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (The fatal rumour : a nineteenth-century Indian novel. B R Rajam Aiyar; Stuart H Blackburn, OUP, 1998). சி. சு. செல்லப்பா வாடிவாசல் என்ற நாவலிலும் அவ்வட்டார மரபை வடித்துள்ளார்.
===
2300 ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியில் தமிழ் தழைத்ததற்கு அரிய சான்றுகள் கிடைத்துள்ளன. ===
=== புலிமான் கோம்பை, தாதப்பட்டி என்னும் ஊர்களில்
கண்டறியப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள்: ===
புலிமான் கோம்பை வீரக்கற்கள்:
http://www.hindu.com/2006/04/05/stories/2006040518340600.htm
== சான்றுகள் ==
தாதபட்டி நெடுநிலைக்கல்
பழந்தமிழ்க் கல்வெட்டு.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிடைக்கும் சான்றுகளால் தமிழின் மிகப்பழைய வரலாறு மீளாய்வுக்கு உள்ளாகும்.
வத்தலக்குண்டு (வெற்றிலைக்குண்டு), நிலக்கோட்டை ஊர்களுக்கு அருகில் வைகைப் படுகையில் பல சங்ககாலக் கல்வெட்டுகள் நெடுங்கல் (menhir), நடுகல் (hero stone) இரண்டிலும் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கண்டெடுக்கப் பெற்றுள்ளன.
தாதப்பட்டிநெடுநிலைக் கல்
வத்தலக்குண்டு (வெற்றிலைக்குண்டு), நிலக்கோட்டை ஊர்களுக்கு அருகில் வைகைப் படுகையில் பல சங்ககாலக் கல்வெட்டுகள் நெடுங்கல் (menhir), நடுகல் (hero stone) இரண்டிலும் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கண்டெடுக்கப் பெற்றுள்ளன.
தாதப்பட்டிநெடுநிலைக் கல்
முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை
அமைவிடம் : திண்டுக்கல் மாவட்டம்
கல்வெட்டுப் பாடம்:
அடியோன் பாகற்பாளிய் கல்
அடியோன் பாகற்பாளிய் கல்
சிறப்புகள் (தாதப்பட்டி நடுகல்):
சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள நடுகல் பற்றிய செய்திகள் (எழுத்துடை நடுகல், கூறுளி குயின்ற கோடுமா எழுத்து ) உண்மையே என மெய்பித்தது.
இதுவரை அவை ஓவியங்களைக் குறிக்கின்றன வரி வடிவங்களை அல்ல என்ற கருத்தும் நிலவியது.
இதுவரை அவை ஓவியங்களைக் குறிக்கின்றன வரி வடிவங்களை அல்ல என்ற கருத்தும் நிலவியது.
• இதுநாள் வரை கி.பி 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துப் பொறிக்கப்பட்ட இருளப்பட்டி நடுகல் கல்வெட்டே காலத்தால் முந்தியது என்ற கூற்று மாற்றப்பெற்றுள்ளது.
• நெடுநிலைக் கல்லில் எழுத்துக்கள் கிடைத்திருப்பினும் இதுவே முதல் முறையாகும்.
மேலும் சில செய்திகள்:
180 செ.மீ. உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்டது.. இதன் தொடக்கப்பகுதி உடைந்துள்ளதால் தொடக்க எழுத்துக்களை அறியஇயலவில்லை. '' ...ன் அடியோன் பாகற்பாளிய் கல் ''என்று பொறிக்கப்பெற்றுள்ளது. ஒரு தலைவனின் (தலைவனின் பெயர் உடைந்துள்ளது) அடியோன் ஆகிய பாகல் என்பவர்க்காக எடுக்கப்பெற்ற கல், என்பதே இதன் பொருள். ''அடி ஓன்'' என்பதை அடிமக்களைக் குறிக்கலாம் என ''அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்ற தொல்காப்பிய நூற்பாக்கொண்டு (தொல் :25) ஊகிக்கிறார் கா. ராஜன்.
http://182.19.37.67/ta/tdb-titles-cont-inscription-html-tatappatti-280430
http://182.19.37.67/ta/tdb-titles-cont-inscription-html-tatappatti-280430
=== அண்மைக்காலத்தில் அப்பகுதியிலே: ===
செவ்வாய், 13 நவம்பர், 2018
14 -11 -2018 குழந்தைகள் தின விழா கவிதை
தலைப்பு: தம்பிக்கு ஒரு சொல்
அம்மா அப்பா சொல்லை
அணுவளவும் தள்ளாதே பாப்பா
தாத்தா பாட்டி பேச்சை
தட்டாமல் கேக்கணும் தம்பி
கணிப்பொறி விளையாட்டை விட்டு
கால்பந்தை கைக்கொள்ளு பாப்பா
ஊர்க்கார நண்பர்களோடு
ஓடி விலையாடனும் தம்பி
ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றி அதை
உயிர் போல காக்கணும் பாப்பா
படிப்பையும் பண்பையும் நல்ல
பணிவையும் பின்பற்று தம்பி
பெரியோரின் சொல்கேட்டு நீயும்
பின்பற்றிச் சிறக்கணும் தம்பி
வள்ளுவர் அவ்வையார் சொற்கள்
வாழ்க்கைக்கு உறு துணை பாப்பா
அனாவை சொல்லிடும் போதே
அறம் சொன்ன தமிழ் அடி பாப்பா
தரணியில் முதல் மொழியான நம்
தாய்த்தமிழ் உயர் வடா தம்பி
தாய்மொழி கல்லாத மூடர்
சகவாசம் தள்ளடா தம்பி
குழந்தை நாள் கொண்டாடும் இன்றே நல்ல
குணம் இதை கைகொள் தம்பி.
தலைப்பு: தம்பிக்கு ஒரு சொல்
அம்மா அப்பா சொல்லை
அணுவளவும் தள்ளாதே பாப்பா
தாத்தா பாட்டி பேச்சை
தட்டாமல் கேக்கணும் தம்பி
கணிப்பொறி விளையாட்டை விட்டு
கால்பந்தை கைக்கொள்ளு பாப்பா
ஊர்க்கார நண்பர்களோடு
ஓடி விலையாடனும் தம்பி
ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றி அதை
உயிர் போல காக்கணும் பாப்பா
படிப்பையும் பண்பையும் நல்ல
பணிவையும் பின்பற்று தம்பி
பெரியோரின் சொல்கேட்டு நீயும்
பின்பற்றிச் சிறக்கணும் தம்பி
வள்ளுவர் அவ்வையார் சொற்கள்
வாழ்க்கைக்கு உறு துணை பாப்பா
அனாவை சொல்லிடும் போதே
அறம் சொன்ன தமிழ் அடி பாப்பா
தரணியில் முதல் மொழியான நம்
தாய்த்தமிழ் உயர் வடா தம்பி
தாய்மொழி கல்லாத மூடர்
சகவாசம் தள்ளடா தம்பி
குழந்தை நாள் கொண்டாடும் இன்றே நல்ல
குணம் இதை கைகொள் தம்பி.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
