எனக்குள் இருக்கும்
இருள் சூழ்ந்த ஒருத்தியை
எப்பாடு பட்டாவது
ஒளி இருக்கும்
திசை நோக்கி வலு கட்டாயமாக
இழுத்துச் செல்கிறேன்..
அடம் பிடித்து அடுப்பங்கரைக்குள்
முடங்கும் அந்த முட்டாள்
பெண்ணை நான்
என்ன சொல்லி
வெளிக் கொணர்வேன்..
இவ்வுலகம் உனக்காக
படைக்கபட்டது
நீ உயரப் பறந்து உலகை ஆள
அங்கே உனது "கனவுகள்"
சிறகுலர்த்தி உனது
வருகையை எதிர் நோக்கி
காத்துக் கொண்டிருக்கிறது🪽.🪽🪽
மூலையில் முடங்கி
கிடங்தது போதமடி
இந்த முட்டாள் சம்பர்தாயங்களை
உடைத்தெறிந்து
அதற்கொரு
முற்றுப் புள்ளியிட்டு விட்டு..
உன் சுதந்திரத்திற்கு ஒரு
தொடக்க புள்ளி வைத்து
சுதந்திர காற்றை சுவாசிக்க
ஒளி இருக்கும் திசை நோக்கி
இருள் அகற்றி வெளியே வா....🪽🪽
உனது உயிர் மூச்சுக் காற்றை
நீ சுதந்திரமாக சுவாசிக்க
இங்கே உனக்கு
தடை விதிக்கும் மா மேதைகள்
"யார்" இவர்கள்...? 🪽🪽🪽
உனது கண்ணீரை
தன் கை குட்டை கொண்டு
துடைத்தவர்களா..?
இல்லை.....
நீ வலியில் துடித்த போது
உனது துன்பத்தில்
முக்கால் பங்கை தன்
முதுகில் சுரந்தவர்களா...?
யார் இவர்கள்.....?
உன்னை சுற்றி முட்டாள்
சம்பர்தாய கோடுகளை கிளித்து
உன்னை அதனுள்ளே
கட்டி வைத்து வேடிக்கை
பார்க்கும் வெறும் மானிடக் கூட்டம்.... !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக