ஞாயிறு, 30 நவம்பர், 2025

என் பேத்தி மட்டுமே கேட்டா

கைத் தடி துணையோடு
கடைவீதிக்குச் சென்று வந்தேன்

ஓடக்கர பள்ளத்துல
ஊண்டி நடக்குனும்னு

ஒரு சாச்சு விழுந்ததுல
உடம்பு காயம் பட

மகன் கேட்டான்
வயசான காலத்தில
ஓரிடத்தில உக்கார வேண்டியது தான
இனி
உனக்கு ஒரு வைத்தியம் பாக்கனுமா?

மருமக கேட்டா பாத்து நடக்கனும்னு

என் பேத்தி மட்டுமே கேட்டா
அப்பத்தா வலிக்குதான்னு..

- குருபாதம்