புதன், 29 ஏப்ரல், 2020

பாடிகாட் கவிதை

மகள்


மனைவியின்
மறுப்புகளுக்கும்
எதிர்ப்புகளுக்கும்
அடைப்பு
கொடுக்கப்
பிறந்துவிட்டாள்
எனக்கொரு...

             - அடியாள்!

புதன், 8 ஏப்ரல், 2020

மின்மினி


மின்மினி



மின்மினி  உன்னைப்பற்றி
கவிபாட   யோசித்தேன்
எட்டவில்லை எதுவும்

அமாவாசை  இருட்டையும்
அலங்கரிக்கும் மின்னல் துளிகளை
எப்படி எழுத?- எனக்கு
எட்டவில்லை எதுவும்

வயல்வெளியை,மலைச்சரிவை
நீர்க்கரையை,தரைப்பரப்பை
திருவிழாக் களமாக்கும்
கட்டணமில்லா மின்விளக்கை
எப்படி  சொல்ல? - எனக்கு
எட்டவில்லை  எதுவும்

மின்னிணைப்பு கெடுபிடிகள்
ஏதும் செல்லாத- டங்ஸ்டனே
மண்ணுக்கு ஒருவரமே!
விண்மீனின்  எதிரொளிப்பை 
இன்னும்
இன்னும்-முயற்சிமட்டுமே
செய்கின்றேன்- எனக்கு
எட்டவில்லை எதுவும்!.
                
                  -அன்பன் அருண்பாரதி