சனி, 24 அக்டோபர், 2020

சங்ககால இரணியன்

 சங்ககாலத்தில் இருந்த பாண்டிய தளபதிகளில் ஒருவர் 'இரணியன்' ஆவார். இந்த தளபதியின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி பாண்டியநாட்டின் குறுகுறு நிலப்பகுதிக்கு இரணிய முட்டம் நாடு என்றே பாண்டியன் பெயரிட்டுள்ளான்.படைத்தலைவர்களை பெருமைப் படுத்தும் பாண்டியரின் நற்பண்புக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.

அந்த நாடு நத்தம், அழகர் மலை, ஆனைமலை திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.[1] முதலாம் பராந்தக கால கல்வெட்டுகள் இந்நாட்டை கீழ் இரணிய முட்டம் என்றும் மேல் இரணிய முட்டம் என்றும் பிரித்து இருந்ததாக கூறுகின்றன.[2][3]

குலதெய்வமாக இரணியன்:தொகு

பாண்டிய நாட்டில் உள்ள மறவர் இனக்குழு(அகதா )ஒன்றின்

இரணியன் கோவில்.jpg
இரணியன் கோவில்.1.jpg

முன்னோனாக இந்த தளபதி இரணியன் கருதப்படுகிறார். இவருக்கு விருதுநகர் மாவட்டத்திலுள்ள 'செந்நெல்குடி' என்னும் ஊரில் கோவில் உள்ளது. [3]அகத்தாமறவர் என்று அழைக்கப்படும் மணியக்காரர் இனத்தவர்கள் இவரை குலதெய்வமாக கொண்டுள்ளனர்.நாயக்கர் ஆட்சி ஏற்படும் வரை இரணியன் குடும்பத்தாரே இபகுதியை ஆண்டுள்ளனர்.பாண்டியர் சார்பாக குறுநில மன்னர்களாகவும் இருந்துள்ளனர்.பழமையான பெருமாள் கோவில் ஒன்றும் இவ் வூரில் உள்ளது.

அழகர் மலையில் உள்ள ஒரு கோட்டைக்கு இரணியன் கோட்டை என்றே பெயர்உள்ளது. இந்தக் கோட்டையை முதன்முதலில் கட்டிய பழங்கால தலைவனாக இவன் இருக்கலாம்.மேலும் இவரது வழியினர் என்று கூறிக்கொள்ளும் மறவர் (அகதா) இனத்தவர்கள் பெரும்பாலும் வைணவர்களாகவே இருப்பது இந்த செய்திகளை உறுதி செய்கிறது.இவனது இனக்குழுவினர் நத்தம், அழகர்மலை, திருப்பத்தூர் பகுதிகளில் செறிந்து வாழ்கின்றனர்.

அழகர் மலையில் உள்ள இரணியன் கோட்டை :தொகு

வரலாற்று ஆசிரியர்களில் சிலர் இரணிய வர்மன் என்னும் சிம்ம விஷ்ணுவே இந்தக் கோட்டையைக் கட்டினான், எனவே அது இரணியன் கோட்டை எனப் பெயர் பெற்றது என தவறாக கருதுகின்றனர். ஆனால் பல்லவர்கள் ஆட்சி தோன்றுவதற்கு முன்னரே இரணிய முட்டம் என்று அழகர்மலை பெயர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தளபதியே இரணியன் கோட்டை என்பதை கட்டிஇருப்பார்.அவரது பெயரைக்கொண்டே பிற்காலத்தில் விரிவு படுத்த்தப்பட்டுள்ளது .

இரணியனின் குலதெய்வம்:தொகு

இவர் எர்ரக்கம்மாள்  (எரக்கொற்றி) என்னும் கொற்றவை தெய்வத்தை வழிபட்டு வந்ததாக இவரது கதை கூறுகிறது. இந்த தெய்வத்தின் கோவில் பழங்காலதொல்லியல் சின்னங்கள் உடன் காணப்படுகிறது. கல்வட்டம், கல்பதுக்கை கற்குழி முதலான தொல்லியல் சின்னங்கள் உடன் திண்டுக்கல் மாவட்டம் சந்தையூர் என்னும் இடத்தில் எர்ரக்கம்மாள் கோவில் உள்ளது.[4]

இரணியனின் குடும்ப பெயர்கள்தொகு

இவரது வழியினரின் குடும்ப பெயர்களும் மிகவும் தொன்மை வாய்ந்ததாக உள்ளன. எரணன், எரவாதன், வெளியன் (வெள்ளையன்) தித்தன் (தொத்தன்) போசன் (கோசர்) போன்ற வராற்று சிறப்புமிக்கவையாக உள்ளன .

  1.  கமால் Dr. எஸ்.எம். சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) செப்பேடு 43. பக்: 389
  2.  திருமெய்யம் விஷ்ணு கோவில் மேற்குச் சுவரிலுள்ள சடையவர்மர் பராக்கிரம பாண்டியரின் மற்றொரு பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,33 முனையதரையர் மக்கணாயனார் தம் மனைவியின் உடன்பிறந்தாரான மேலை இரணியமுட்ட நாட்டுக் குளமங்கலத்தைச் சேர்ந்த திருவுடையார் பிறவிக்கு நல்லாருக்குக் காணியாட்சியாக நிலம் விற்பனை செய்த தகவலைத் தருகிறது.
  3. ↑ 3.0 3.1 முப்பது கல்வெட்டுகள்: மூலம், விளக்கவுரை ...பக்-16 வை.சுந்தரேச வாண்டையார்
  4.  https://maps.app.goo.gl/gus5ZHEQpMc7aoPN7

புதன், 29 ஏப்ரல், 2020

பாடிகாட் கவிதை

மகள்


மனைவியின்
மறுப்புகளுக்கும்
எதிர்ப்புகளுக்கும்
அடைப்பு
கொடுக்கப்
பிறந்துவிட்டாள்
எனக்கொரு...

             - அடியாள்!

புதன், 8 ஏப்ரல், 2020

மின்மினி


மின்மினி



மின்மினி  உன்னைப்பற்றி
கவிபாட   யோசித்தேன்
எட்டவில்லை எதுவும்

அமாவாசை  இருட்டையும்
அலங்கரிக்கும் மின்னல் துளிகளை
எப்படி எழுத?- எனக்கு
எட்டவில்லை எதுவும்

வயல்வெளியை,மலைச்சரிவை
நீர்க்கரையை,தரைப்பரப்பை
திருவிழாக் களமாக்கும்
கட்டணமில்லா மின்விளக்கை
எப்படி  சொல்ல? - எனக்கு
எட்டவில்லை  எதுவும்

மின்னிணைப்பு கெடுபிடிகள்
ஏதும் செல்லாத- டங்ஸ்டனே
மண்ணுக்கு ஒருவரமே!
விண்மீனின்  எதிரொளிப்பை 
இன்னும்
இன்னும்-முயற்சிமட்டுமே
செய்கின்றேன்- எனக்கு
எட்டவில்லை எதுவும்!.
                
                  -அன்பன் அருண்பாரதி