செவ்வாய், 25 டிசம்பர், 2018
ராயபுரம் மருத்துவமனை
மைசூரின் ஐதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த போரில் சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர். இதனால் 1782 இல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அறச்சீலர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்தார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது. 1799 இல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1808 இல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910 இல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)