சந்தையூர் ஜமீன்
வரலாறு:(கி.பி1102-1900வரை)
சந்தையூர் ஜமின் ஏனைய
கம்பளத்தார் ஜமின்களை போல
மிகபழமை வாய்ந்தது . துவாபர
யுகத்தில் இக்கம்பள மக்கள்
கிருஷ்ணரை
வணங்கியதாகவும்
விஷ்ணு இவர்களுக்கு ஆசி
வழங்கி என்றும்
குறைவு இல்லாமல் இருப்பீர்
என்றும் , நீங்கள் சொல்லும்
வாக்கு பலிக்கும் என்றும்
கூறியதாக இக்குல மக்களால்
நம்பபடுகிறது .
சுமார் ஆயிரம் வருடம்
முன்பு தமிழ்நாட்டு எல்லை
பகுதியில் உள்ள ஆந்திர
மாநிலம் சந்திரகிரி மற்றும் சில
ஊர்களை குள்ளப்ப நாயக்கர்
என்பவர்
ஆட்சி செய்து வந்துள்ளார் .
இவ்வாறாக இருக்கையில்
விஜயநகர
மன்னரை ( சொந்தகாரரை )
பார்க்க சென்றுள்ளார்
குள்ளப்பர் , ஆனால் விஜயநகர
கோட்டைக்கு அவ்வளவு
எளிதாக யாரும் செல்ல
முடியாது . கோட்டை வாசலில்
சோமன் என்ற வீரன் ஒருவன்
இருப்பான் அவனிடம்
சண்டையிட்டு அவனை
வென்றால் தான்
கோட்டைக்குள் யாரும் செல்ல
முடியும் . யாராலும்
அடக்கமுடியாத அந்த
சோமனை குள்ளப்ப நாயக்கர்
மற்றும் அவரின் 8 சகோதரர்கள்
அடக்கி மன்னரை சந்தித்தனர் .
இவர்களின்
வீரத்தை கண்டு வியந்த மன்னர்
இவர்களுக்கு சாமரம் ,
அணிகலன் போன்ற
பரிசுகளை கொடுத்து
பாராட்டி அனுப்பினார் .
முகமதியர்களின்
படையெடுப்பில்
தெற்கு நோக்கி
கம்பளத்தார்கள் வருகையில்
குள்ளப்ப நாயக்கர் வம்சமும்
தமிழகத்தில் மதுரைக்குப்
பக்கத்தில் வந்து குடியேறினர் .
மதுரை பாண்டிய
மன்னர்களால் ஆளப்பட்ட நேரம்
என்பதால்
இவ்வம்சத்தை சேர்ந்தவர்கள்
பாண்டியரிடம் சென்று தாங்கள்
வாழும்
பகுதியை தாங்களே ஆள
வேண்டும் என்றும் தங்களின்
முன்னிலமையையும்
எடுத்து கூறினர். பாண்டியர்
கம்பளதார்களிடம் நீங்கள்
மதுரை பகுதியில் உள்ள
கள்ளர்களை அடக்கி காவல்
செய்வீர் என்றும் , திசைகாவல்
பொறுப்பை
கம்பளதார்களுக்கு
வழங்குகின்றேன்
என்று கூறினார் .
கம்பளத்தார்கள் அங்குள்ள
கள்ளர்களை அடக்கி "
கருக்கோட்டன் பட்டியில் ""
கோட்டை அமைத்து கி.பி.1102
- 1900
வரை இவர்களே இப்பகுதிக்கு
ஆட்சி செய்து வந்துள்ளனர் .
அரசர்களாகவும் , ஆங்கிலேய
ஆட்சி காலத்தில்
ஜமின்களாகவும்
இருந்து வந்துள்ளனர் .
பரவலாக
கிருஷ்ணசாமி குள்ளப்ப
நாயக்கரை பற்றிய ஆவணங்கள்
அதிக அளவில் உள்ளன
கடைசி அரசர்
திரு.தும்மச்சிபாண்டியன்
(எ)
தும்மச்சி கோப்பைய நாயக்கர்
கடைசி இராஜமாதா
திருமதி.பொம்முத்தாயம்மாள்.
இந்த சந்திரகிரி அரசர் குள்ளப்பா நாயக்கரை நமது முன்னோர்கள்தான் உயிரை பனையம் வைத்து காப்பாற்றி உள்ளனர்.
இந்தக் கதைகளை முசுராம்படை என்று நமது கிராமத்தில் சொல்கிறார்கள்.
முஸ்லீம் படை என்பதே காலப்போக்கில் முசுராம்படை என்று மாறியுள்ளது.
குள்ளப்பாநாயக்கர் தங்கி இருந்த கோம்பை குள்ளக்கோம்பை என்று அன்றிலிருந்து அழைக்கப்படுகிறது.
![]() |
| குள்ளக்கோம்பை ஒரு தோற்றம் |
இவர்கள் காங்கேயம் கருவூர் பகுதிகளில் சில காலம் தங்கியிருந்து மீண்டும் முஸ்லீம் படையின் தொல்லைகள் ஏற்பட்டதால் பகுள்ளக்கோம்பை வந்தனர் எனத் தெரிகிறது
![]() கடைசி அரசியார் ஜமீன்தாரினி திருமதி.பொன்னழகுத் தாயம்மாள் |
வளர்ப்பு மகனான வைரவேல் பாண்டியனுடன்
நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில் பெரியோர்களால் பட்டம் சூட்டப்பட்ட ஜமீன்தார்
திரு.சீனிப்பாண்டியன்-ராமுத்தாயம்மாள்
ஆதாரம்:https://m.facebook.com/story.php?story_fbid=864717626925674&id=849411528456284
http://thottiyanaiker.blogspot.com/2012/01/blog-post_4686.html?m=1








